செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (17:26 IST)

‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள் - அட்டகாசமாக பதிலடி கொடுத்த கமல்

கமல்ஹாசனின் கட்சி நான்கு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘தமிழநாட்டில் பாஜக, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளுக்கு வேலையில்லை. கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்காது. அதிகப்பட்சமாக நான்கு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும்’ என கூறியிருந்தார்.
 
மேலும், தமிழநாட்டில் அதிமுக மற்றும் திமுக மட்டுமே நிலைக்கும். நாம் ஆளும் கட்சியாக இருப்போம் அவர்கள் எதிர்க்கட்சியாக இருப்பார்கள் என அதிரடியாக பேசினார்.
 
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் “அவர்கள் யாருக்கும் கெடுவிதிக்க முடியாது. அவர்களுக்கு விதிக்க வேண்டிய கெடு நிறைய இருக்கிறது. இப்படி பேசும் இவர்கள் ஒரிஜினல் சந்திரனை (எம்.ஜி.ஆர்) பார்த்தது கூட கிடையாது. இவர்கள் ‘அம்மா’ வாசைக்கு பின் வந்தவர்கள்” என சாமார்த்தியமாக கமல்ஹாசன் பதிலளித்தார்.
 
பொதுவாக, கலைஞர் கருணாநிதிதான் இப்படி சாமார்த்தியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பதிலளிப்பார். அதேபோல், பதிலளித்து செய்தியாளர்களிடமும், அங்கு கூடியிருந்தவர்களிடமும் கமல்ஹாசன் கைத்தட்டலை வாங்கியுள்ளார்.