செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (13:11 IST)

முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன்

நடிகர் கமலஹாசன் தமிழகம் வந்துள்ள ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்துள்ளார்.



நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் கட்சி தொடங்கும் முன்பு இருந்தே பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்களையும் சென்று சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்ற சில மாநில முதல்வர்களையும் சந்தித்தது ஊடகங்களில் செய்தியானது.

அந்த வரிசையில் தற்போது தமிழகம் வந்துள்ள பிஜு ஜனதா தல் கட்சி தலைவரும் ஒரிசா முதல்வருமான நவின் பட்நாயக்கை சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்து பேசிக்கொள்ளும் காணொளி காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.