4 அமாவாசையில் என்ன நடக்கும்? அமைச்சருக்கு ஸ்ரீப்ரியா அதிரடி பதில்
நேற்று விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்த அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்றும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்களின் கட்சிகள் 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்றும் பேசினார்
இதற்கு இன்று நடிகையும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளருமான ஸ்ரீப்ரியா தனது டுவிட்டரில் கூறியதாவது: ஆட்சியில் இருப்பவர் சற்று அறிவுப்பூர்வமாக பேசினால் சிறப்பாக இருக்கும்! அமைச்சர் என்ற ஆணவமோ? எங்களுக்கு நாள் குறிக்க நீங்கள் யார்? உங்கள் ஊழலுக்கு 'பால்' , 2 அல்லது 4 அமாவாசையிலோ நடக்கும்! வெயிட் அண்ட் வாட்ச்' என்று பதிவு செய்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சருக்கு 'பால்' என்ற சொல் வரும் வகையில் ஸ்ரீப்ரியா பதிவு செய்த டுவீட் பெரும் பரபரப்பாகியுள்ளது.