1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 மார்ச் 2021 (10:31 IST)

8 மணி நேர வேலை என்பது இந்தியாவில் கேள்விக்குறி ஆகிவிட்டது: கமல் டுவீட்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் தற்போது நேற்று முதல் மீண்டும் அடுத்த கட்ட பிரசாரத்தை தொடங்கி உள்ளார் 
 
கமல்ஹாசன் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ள நிலையில் இந்த அணி ஆட்சியை பிடிக்குமா அல்லது ஆட்சியை பிடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
நேற்றைய முதல் நாள் பிரசாரத்தில் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததையடுத்து அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் இன்று தொழிலாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அவர் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்.போராடிப் பெற்ற உலகளாவிய உரிமையான 8 மணி நேர வேலை என்பது இந்தியாவில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம் வரைக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலை தொடரலாகாது.