வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (18:05 IST)

’கோவை சரளாவால் கமல்ஹாசன் கட்சியிலிருந்து விலகினேன் ’- குமரவேல்

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பலத்த போட்டியுடன் களம் இறங்குகின்றன. இந்நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இன்று அதன் முக்கிய நிர்வாகியான குமரவேல் விலகியுள்ளார். 
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய குமரவேல் கூறியதாவது:
 
வேட்பாளர்களுக்கான நேர்காணலில் காமெடி நடிகை கோவை சரளா இருந்தார். அவருக்கும் அரசியலுக்கும் என்ன? இதுபற்றி நான் என் மனைவியிடம் கூறிய போது 'கோவை சரளா உங்களுக்கு நேர்காணல் நடத்த வேண்டுமா என்று என்னிடம் கேட்டார்' என்று தெரிவித்தார்.
 
கமல் கட்சி ஆரம்பித்தது முதல் அவருடம் பயணிக்கிறோம், ஆனால் கோவை சரளா கட்சிக்கு வந்து சில நாட்களே ஆனது, இந்நிலையில் வேட்பாளர் நேர்காணலில் அவர் இருந்து என்னை நேர்காணல் நடத்தியதால் நான் அதிருப்தி அடைந்தேன்.
யாரும் போட்டியிடாததால் நான் கடலூரில் போட்டியிட முன்வந்தேன். கட்சியினரின் தவறான வழிநடத்துதல் காரணமாக கமல்ஹாசன் தவறான முடிவுகள் எடுக்கிறார். நான் நேர்காணலில் பன்ங்கேற்கவில்லை என கமல்ஹாசன் கூறுவது தவறானது. நான் பங்கேற்றேன். நேற்று வந்த கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதா என்ற அதிருப்தியில் நான் ம.நீ.மய்யம் கட்சியிலிருந்து விலகினேன் இவ்வாறு தெரிவித்தார்.