ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (09:26 IST)

கமல் கட்சியில் அதிரடி மாற்றம் – தேர்தலுக்கான வியூகமா ?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

கமலஹாசன் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலையும் சந்தித்து அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்த முடிவு நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது அக்கட்சி.

இதுதொடர்பாக கமல் வெளியிட்ட அறிவிப்பில் ‘தமிழக அரசியல் என்பது மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலம் மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும் தனது பாரம்பரிய பெருமையை இழந்து நின்ற சூழலில் அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கவும் மீண்டும் மக்களுக்காக பாடுபடும் ஒரு கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்ற எண்ணத்தினாலும் உருவாக்கப்பட்டது மக்கள் நீதி மய்யம்.

அதன் காரணமாக கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் மக்களவைத் தேர்தலை துணிவுடன் சந்தித்தோம். அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் வகையில் பெரும் ஆதரவை மக்கள் அளித்தனர். அந்த ஆதரவை அதிகப்படுத்தி 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் மக்கள் நலன் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட, உத்வேகத்துடன் பாடுபட முடிவுசெய்து கட்சியை வலுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுப்பதற்கு விரும்பினேன். அந்த வகையில் கட்சியில் தலைவருக்கு கீழ் துணைத் தலைவர், ஆறு பொதுச் செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது

கட்சி அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையை பொதுச் செயலாளர் (அமைப்பு), வடக்கு மற்றும் கிழக்கு &தெற்கு மற்றும் மேற்கு என இரண்டு பதவிகளாக உருவாக்கப்படுவதாகவும், தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச் சாவடி வரையில் கட்சியை கொண்டுசெல்ல பொதுச் செயலாளர் (ஒருங்கிணைப்பு) என்ற பதவி உருவாக்கப்படுகிறது என்றும், அத்துடன் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர், சார்பு அணிகளின் பொதுச் செயலாளர், தலைவர் அலுவலக பொதுச் செயலாளர் பதவிகளும் உருவாக்கப்படுகிறது 
கட்சி நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோவை, விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொதுச் செயலாளர், ஒருங்கிணைப்பு -  ஆ.அருணாச்சலம்.
  • பொதுச் செயலாளர், அமைப்பு (வடக்கு& கிழக்கு) - ஏ.ஜி.மவுரியா ஐபிஎஸ், (ஓய்வுபெற்ற காவல் அதிகாரி).
  • பொதுச் செயலாளர், அமைப்பு (தெற்கு&மேற்கு) - தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில்.
  • பொதுச் செயலாளர், கொள்கை பரப்பு - ரங்கராஜன் (முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி).
  • பொதுச் செயலாளர், சார்பு அணிகள் -  வி.உமாதேவி.
  • பொதுச் செயலாளர், தலைவர் அலுவலகம் - பஷீர் அகமது (ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி)