ரஜினி & கமல் கூட்டணி சாத்தியமா ? – பிக்பாஸில் சேரன் கேட்ட கேள்வி !

Last Modified செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (13:39 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன் அதன் தொகுப்பாளர் கமலிடம் ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்வது சாத்தியமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கடந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் பிரபலங்களாக மாறுவேடம் போடும் போட்டி நடந்தது. அதில் இயக்குனர் சேரன் நடிகர் ரஜினியாக வேடம் பூண்டிருந்தார். இந்த வாரம் கமல் வருகைத் தரும் நாளில் அனைவரும் அந்த பிரபலங்களாகவே கமலிடம் கேள்வி எழ்ப்பும் செக்மெண்ட் நடந்தது.

அப்போது ரஜினியாக வேடம் போட்ட கமல் ‘வணக்கம் கமல் , நல்லா இருக்கீங்களா? எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வரு‌ஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தபோது மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிந்த வரைக்கும் சிறப்பா கொடுத்துருக்கோம்.இப்போது நானும் அரசியலில் குதிக்க நினைத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்க குதிச்சிட்டீங்க... நடிகர்களாக இருந்து அவர்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா ?’ எனக் கேட்டார்.

அதற்கு ‘அவர்கள் எதிர் பார்ப்பதில் ஒன்று, இப்படி நானும் நீங்களும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான். முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால் முடியும். அதற்கு, நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன்” என்று கமல் பதிலளித்தார்.

இந்த வீடியோ ஆகஸ்ட் 4 ஆம் தேதி எடுக்கபட்டு இருந்தாலும் அப்போது ஒளிப்பரப்பான எபிசோட்டில் இது இல்லை. விஜய் டிவியினர் என்னக் காரணத்தினாலோ எடிட் செய்ய இதை இப்போது மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது முகநூல் பக்கத்தில் இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :