விலைக்கு போகாதீங்க மக்களே - கமல் பேச்சு!!
ரூ.5 ஆயிரம் ரூபாய்க்கு விலை போய் விடாதீர்கள் என கமல் மக்களுக்கு அறிவுரை.
கமல்ஹாசன் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஜனநாயகத்தின் எதிரிகளோடுதான் நமக்கு போட்டி. எதிர் சித்தாந்தம் உள்ளவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.
ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள். அவர்களுடைய கையில் இருந்து அதனை கொடுக்கவில்லை. மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொடுக்கிறார்கள். அடி மாட்டு விலைக்கு மக்களை மக்களிடமே விற்கிறார்கள். நமது அரசு அமைந்தால் ரூ.5 லட்சம் மட்டும் அல்ல. தேர்தல் முடிந்த பின்பு ரூ.50 லட்சம் வரை கிடைக்கும். எனவே ரூ.5 ஆயிரம் ரூபாய்க்கு விலை போய் விடாதீர்கள்.