செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (11:26 IST)

கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவருக்கு கல்பனா சாவ்லா விருது!

கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவருக்கு கல்பனா சாவ்லா விருது!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றைய சுதந்திர தினத்தில் அவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.
 
சமீபத்தில் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சண்முகப்பிரியா என்ற மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் காலமானபோது கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மருத்துவர் சண்முகப்ரியாவின் மறைவு மதுரை மக்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா அவர்களுக்கு இன்று கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது. 
 
இந்த விருதை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கிய போது அந்த விருதை சண்முகப்ரியாவின் கணவர் பெற்றுக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.