1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (07:54 IST)

நாட்டை காக்க உயிரிழந்தார்களா? விஜய்யின் கள்ளக்குறிச்சி விஜய் விசிட்டை கிண்டல் செய்த அனிதா சம்பத்..!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று நடிகர் விஜய் பார்த்த நிலையில் இதனை அனிதா சம்பத் நாட்டுக்காக உயிரிழந்து மார்பில் குண்டடி பபட்டவர்களா இவர்கள்? என்று கிண்டல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று நடிகர் விஜய் நேரில் சென்று பார்த்தபோது பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 
 
இந்த சம்பவம் குறித்து செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகை அனிதா சம்பத் கூறிய போது நாட்டுக்காக போராட சென்றபோது, தீவிரவாதிகளை நேருக்கு நேர் சந்திக்கும்போது, நெஞ்சில் குண்டடிபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்காங்க பாவம் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு குறித்து விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva