மாணவி மரணம் எதிரொலி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்
இந்த போராட்டம் வன்முறையாக மாறியது என்றும் பள்ளி சொத்துக்கள் சூறையாடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது