திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:39 IST)

அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல, தி.மு.க இந்த நாட்டு மக்களுக்கே எதிரி: கடம்பூர் ராஜூ

அதிமுகவுக்கு மட்டுமல்ல இந்த நாட்டு மக்களுக்கு எதிரி திமுக தான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் பிரச்சார மேடையில் பேசியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலு மணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசும்போது ’தமிழகத்தில் பாஜக தலைமையிலான மூன்றாவது அணி பற்றி நமக்கு கவலை இல்லை. நமக்கு எப்போதுமே எதிரி திமுக தான். திமுக அதிமுகவுக்கு மட்டுமல்ல இந்த நாட்டு மக்களுக்கே எதிரி என்றும் தெரிவித்தார்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் சட்டமன்ற தேர்தலின் போதும் தமிழகத்தில் டாஸ்மாக்கினால் கணவரை இழந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது, திமுக ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று கனிமொழி தெரிவித்தார்

ஆனால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமின்றி பூங்கா வணிக வளாகங்களிலும் மது விற்பனை உள்ளது என்று அவர் குற்றம் காட்டினார்

தமிழக முழுவதும் போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது என்றும் போதை பொருள் கடத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டவரே திமுக நிர்வாகியாக இருந்தவர் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது என்றும் திமுக ஆட்சியை குறித்து கடம்பூர் ராஜு கூறினார்.

Edited by Siva