ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:57 IST)

பாலியல் வீடியோ விவகாரம்; பாஜகவிலிருந்து கே.டி.ராகவன் திடீர் விலகல்!

பாலியல் வீடியோ தொடர்பான சர்ச்சைகள் அதிகமான நிலையில் பாஜக பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்து வருபவர் கே.டி.ராகவன். சமீபத்தில் கே.டி.ராகவனின் பாலியல் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கே.டி.ராகவன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கே.டி.ராகவன் “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.

என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!” என தெரிவித்துள்ளார்.