1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (13:44 IST)

பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல: காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

Jothimani
பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல என்றும் மனுநீதியே என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பாக பாஜக, ஆ ராசா மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆ ராசா மீது விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல. மனுநீதியே. மனுநீதி பெண்களை பிறபடுத்தப்பட்ட, தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களை இழிவுபடுத்துவது. அடிமைகளாக கட்டமைப்பது.  சுயமரியாதையும்,கண்ணியமும் மிகுந்த  எந்த சமூகமும் மனுநீதியை ஏற்கமுடியாது. மனுநீதியும்,பாஜகவும் மனிதகுல விரோதிகள்.