வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (14:10 IST)

மே மாதமே ஜெ.வின் உடல்நிலை மோசமாக இருந்தது - மருத்துவர் வாக்குமூலம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி சர்க்கரை நோய் நிபுணர் ராமசந்திரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜெ.வின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நேற்று அப்போலோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் ராமசந்திரன் ஆகியோர் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். இதில் ஜெ.வின் உடல்நிலையை பரிசோதிக்க 2016ம் ஆண்டு மே மாதம் ராமச்சந்திரன் போயஸ்கார்டன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதே ஜெ.விற்கு சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்துள்ளது. எனவே, உங்கள் உடல்நிலை மோசமாக உள்ளது என ஜெ.விடம் ராமச்சந்திரன் கூறியுள்ளார். புதிதாக வந்த இன்சுலின் மருத்துகளை எடுத்துக்கொள்ளுமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அதன்பின் அவர் அழைக்கப்படவில்லை. ஆனால், அந்த மருந்துகளை ஜெ. எடுத்துக்கொள்ளவில்லை என்பது டாக்டர் சிவகுமார் மூலம் ராமசந்திரனுக்கு தெரியவந்தது. 
 
அவரிடம் கேள்வி எழுப்பிய ஆறுமுகசாமி, “2016 மே மாதமே ஜெ.வின் உடல் நிலை மோசமாக இருந்தது எனில், அவருக்கு உரிய சிகிச்சை ஏன் அளிக்கப்படவில்லை?” என விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் கேளுங்கள்’ என பதில் கூறியுள்ளார்.
 
அவரின் வாக்குமூலத்தை அடுத்து ஜெ.வின் உடல் நிலை மோசமாக இருந்தும் ஏன் மருந்து எடுத்துக்கொள்ளவில்லை, மருத்துவமனைக்கு செல்லவில்லை? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.