செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (11:22 IST)

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக மட்டுமே விலகல் - ஜெயகுமார்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. 

 
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக மட்டுமே விலகியுள்ளது. பாமகவை தவிர்த்து சட்டமன்ற தேர்தலில் அமைந்த அதே கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கு முன்னர் யாருடைய அழுத்தத்தின் பேரில் அவர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் பாமக தனித்து போட்டியிட விரும்பினால் அவர்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது என தெரிவித்தார்.