1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (17:50 IST)

நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரி... ஓபிஎஸ்-ஐ கிண்டலடித்த ஜெயகுமார்

Jayakumar
நாடே  இல்லாத மந்திரிக்கு ஒன்பது ராஜாக்கள் என ஓபிஎஸ் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். 
 
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கட்சியிலேயே இல்லை என்றும் அவ்வாறு இருக்கும் ஓபிஎஸ் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமனம் செய்து இருப்பது காமெடி என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் நாடே இல்லாத ராஜாவுக்கு ஒன்பது மந்திரங்களாம்.. ஓபிஎஸ் அவர்களுக்கு கட்சியே இல்லை, அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை, அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிக்கின்றார் என்றால் இந்த பழமொழியை தான் சொல்லவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்