செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (11:12 IST)

சிக்கிய ஓபிஎஸ் ஆள்! காணாமல் போன ஆவணங்கள் என்னவானது?

அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்துள்ள நிலையில் முன்னர் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிசுப் பொருட்கள், வெள்ளி வேல் உள்ளிட்ட பல பொருட்கள் திருட்டு போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார். இதனைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
ALSO READ: இது தியேட்டர் ஸ்க்ரீனா?.. இல்ல டிவி ஸ்க்ரீனா? – பிரபல தியேட்டரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்!

இந்நிலையில், அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதிர்ச்சிகரமாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கட்சின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். கலவரத்தில் சேதமான அதிமுக அலுவலகத்தை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.