புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified திங்கள், 26 செப்டம்பர் 2022 (16:11 IST)

தோண்டியுள்ள பள்ளங்களே அரசுக்கு எமனாக மாறும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக அரசு  மழை  நீர் கால்வாய்  1500 கி மீ போட்டதாக கூறி வருகிறது. பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இப்பள்ளங்களே அவர்களுக்கு எமனாக மாறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம்  பெற்றோல் வெடிகுண்டு சம்பவம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், தீவிரவாத்தில் ஈடுபாடுள்ளவர்கள், சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு இந்த அரசைப் பற்றிப் பயமில்லை; வெடிகுண்டு கத்திச் கலாச்சம் ஓங்கியுள்ளது. இந்தச்  செயல்கள்  மீது அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்தால்தான் அமைதி  நிலவும்.  இந்த நடவடிக்கைகள் எடுக்குமளவு அரசுக்குத் திராணியில்லை என்று தெரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை;இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளானர். பருவமழை விரைவில் வரவுள்ள  நிலையில், சென்னையில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இப்பள்ளங்களே அவர்களுக்கு எமனாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.