வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 4 ஜனவரி 2020 (14:51 IST)

சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு உத்தரவு !

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ போலீஸார் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் அவரைக் கைது செய்தது.

அதன் பின் 16 மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.எனவே, ஜெகன் மோகன் ரெட்டியும் இந்த வழக்கு சம்பந்தப்பட்டவர்களும் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இரவில் ஐதராபாத் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
 
இதற்கிடையே கடந்த மே மாதம் ஆந்திரமாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். அதனால், முதல்வர் பணிகள் மற்றும் பாதுக்காப்பு காரணங்களுக்கு இந்த நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென சிபிசி நீதிமன்றத்தில் ஜெகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு சிபிஐ  எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இதுகுறித்து நிதிபதிகள்,குற்றம் சாட்டப்பட்டிருப்பவர், எந்தப் பதவியில் இருந்தாலும் அவர் சட்டத்துக்கு முன் சாதாரணமானவர் அதனால் வரும் 10 ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென  உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில் , நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் செல்லுவார் என தகவல் வெளியாகிறது.