வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2019 (14:01 IST)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இடபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டதாக சற்றுமுன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகிய சில நிமிடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி என அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
நவாஸ் கனி, ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்று காதர்மொய்தீன் கூறியுள்ளார். மேலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டதால் திமுக கூட்டணியினர் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளரை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டனர்.
 
இதேபோல் பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரும், ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் போட்டியிடுவது குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.