வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2019 (13:08 IST)

இளநீர் சீவ தெரிந்தால் ரூ.32 ஆயிரம் சம்பளம்! நாளைக்கு நேர்ல இந்த இடத்துக்கு போங்க...

படித்தவர்களுக்கு தற்போது வேலை என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதேநேரம் படிக்காவிட்டாலும் கைத் தொழில் தெரிந்தால் சென்னை உள்பட பெருநகரங்களில் மிகப்பெரிய வருமானத்தை ஈட்ட முடியும். சென்னையில் டீ மாஸ்டர் பரோட்டா மாஸ்டர் உள்பட சமையல்கலை தெரிந்தவர்களின் தேவை தற்போது அதிகமாக உள்ளது. இதேபோல் பல்வேறு தொழில் தெரிந்தவர்களுக்கு வேலை அதிகமாக உள்ளது. அந்த வகையில் இளநீர் சிவ தெரிந்தால் சென்னையில் ரூபாய் 32 ஆயிரம் வரை சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என இன்றைய தினத்தந்தி வரி விளம்பரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள நண்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆம் உண்மை தான் இந்த தகவல் நாளை காலை நீங்கள் ஆழ்வார்ப்பேட்டையில் எங்கள் இடத்திற்கு வாருங்கள் என்று நம்மை அழைத்தார். அதன் விவரங்களை இப்போது உங்கள் பார்வைக்கு...



சம்பளம் ரூ.22,000 - ரூ.32,000

இன்றைய (15.03.19) தினத்தந்தியில் வரி விளம்பரம் பகுதியில் வந்திருக்கும் விளம்பரம்:

இளநீர் சீவ சம்பளம் ரூ.22,000 to ரூ.32,000 - 51/31, பீமன்னா 1st st, ஆழ்வார்பேட், Chn. 9840824174

தொழில் தெரிந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.