Daily Horoscope
✕

போயஸ் கார்டனில் நுழைந்த வருமான வரித்துறை!

போயஸ் கார்டனில் நுழைந்த வருமான வரித்துறை!

Written By Caston
Updated: வியாழன், 9 நவம்பர் 2017 (09:34 IST)
வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சசிகலா, தினகரன் தொடர்புடைய பல இடங்களில் காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவை தினகரன் நேற்று பெங்களூர் சிறையில் சந்த்த நிலையில் இன்று இந்த சோதனை நடந்து வருகிறது.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் அதிகமாக அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். தலைமைச்செயலாளர் வீடு, அலுவலகம், தலைமை செயலகம் என அதிரடியாக சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிரடியாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் என அவர் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியது.
 
ஆனால் தற்போது சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் போயஸ் கார்டனில் உள்ள டிடிவி தினகரனின் பழைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்.. சென்னை உள்பட 27 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை...

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவி.. ஒரு வாரத்திற்கு முன் வாக்கிங் சென்றவர் காணவில்லை..

விலை குறைந்ததால் தீபாவளிக்கு தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள்.. வரலாறு காணாத விற்பனை...

எல் கே அத்வானிக்கு இன்று 100 வயது.. சிறப்பு யாகம்.. குவியும் வாழ்த்துக்கள்...!

2027 ஜனவரி முதல் பழைய செக் புக் செல்லாதா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments