திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (16:11 IST)

இன்னும் 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தின் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
 
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். தென் தமிழகத்தில் பல இடங்களில் மிதமான அல்லது கனமழையோ பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும்.