திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (18:43 IST)

விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்…. இஸ்ரோ வெற்றி!

இஸ்ரோ இன்று மாலை 3.12 மணிக்கு பிஎஸ் எல் வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா என்ற பகுதியில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் அடங்கிய பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக் கோள்கள் விவசாயம், காடுகள் கண்காணிப்பு, மற்றும் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும் திறனை கொண்டது என இஸ்ரோ அறிவித்துள்ளது.