செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (10:31 IST)

திமுகவில் இணைய அமைச்சர் ஜெயகுமார் தூதுவிட்டாரா? அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக திமுகவில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் மாற்று கட்சிகளுக்கு குறிப்பாக பாஜகவுக்கு சென்று கொண்டிருக்கும் தகவல்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ குக செல்வம் அவர்கள் கிட்டத்தட்ட பாஜகவில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திமுகவிலிருந்து மேலும் சிலர் பாஜகவிற்கு செல்வார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் தான் அடுத்த விக்கெட் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய திமுக வின் செய்தி தொடர்பாளர் கண்ணதாசன் அவர்கள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் திமுகவில் இணைய தூது விட்டனர் என்றும் திமுகவில் இணைய தூதுவிட்டதை முடிந்தால் அமைச்சர் ஜெயக்குமார் மறுக்கட்டும் என்றும் சவால் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சசிகலா விடுதலையாகி வந்த பின்னர் அவர் அதிமுகவை கைப்பற்றினால் அமைச்சர்கள் உள்பட பல அதிமுகவினர் திமுகவில் இணையும் வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் கூறப்பட்டு வரும் நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கண்ணதாசன் இவ்வாறு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது