வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:30 IST)

என்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெறுங்கள் – திமுகவுக்கு கு க செல்வம் கேள்வி!

பாஜக தலைவர்களை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என திமுக எம் எல் ஏ கு க செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் கிட்டத்தட்ட பாஜகவில் இணைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்று பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் ஸ்டாலின் குறித்து சில குற்றச்சாட்டுகளை கூறியதும் பாஜக தலைவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கு.க.செல்வம் எம்.எல்.ஏ அதிகாரபூர்வமாக பாஜகவில் சேர்ந்ததாக செய்தி வெளியாகவில்லை என்றாலும் பாஜகவின் ஒரு அங்கமாகவே அவர் மாறிவிட்டதாக கருதப்படுகிறது. இதனை அடுத்தே திமுகவில் இருந்து அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தன்னை சஸ்பெண்ட் செய்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என கு க செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவர்கள் மற்ற கட்சி தலைவர்களை சந்திப்பது எந்த வகையிலும் கட்சியின் மாண்பை மீறுவதாக ஆகாது என்றும் கட்சியின் தலைவர் கருணாநிதியைக் கூட மோடி வந்து சந்தித்தாரே எனக் கேட்டுள்ளார்.