வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (17:32 IST)

தினகரனுக்கு தொப்பி கிடைக்குமா? இன்று முடிவை அறிக்கிறது தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையிலான சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன். இவருக்கு தொப்பி சின்னத்தை வழங்க கூடாது என்று அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இன்று தேர்தல் கமிஷன் 'தொப்பி' சின்னம் யாருக்கு என்ற முடிவை அறிவிக்கவுள்ளது.

தினகரன் மட்டுமின்றி 29 சுயேட்சைகள் இந்த சின்னத்தை கேட்டுள்ளதால் தேர்தல் கமிஷன் அலுவலர் இன்று குலுக்கல் முறையில் யாருக்கு தொப்பி சின்னம் என்பதை தேர்வு செய்யவுள்ளனர். இந்த நிலையில் கடைசி நேரத்தில் தொப்பி கேட்ட சுயேட்சைகள் பின்வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஒரு அரசியல் கட்சியின் சின்னத்திற்கு இணையாக தொப்பி சின்னம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் மீண்டும் அதே சின்னத்தை பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது