செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (09:00 IST)

வேறொரு சுயேட்சைக்கு ஆதரவு தருவேன்:விஷால் அதிரடி

வேறொரு சுயேட்சைக்கு ஆதரவு தருவேன்:விஷால் அதிரடி
ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்திக்கும் விஷால், அதனையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்கவுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒருவேளை ஆர்.கே.நகரில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் வேறொரு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தருவேன் என்றும் தன்னை தேர்தலில் நிற்க விடாமல் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவேன்' என்றும் ஆவேசமாக கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.