வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (12:58 IST)

மத்திய அரசை தாக்கி பேசுவது மட்டும் தான் அரசின் நடவடிக்கையா? சரத்குமார்

sarathkumar
ஒரே நாளில்  வகுப்பறைக்குள்  ஆசிரியைக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து வழக்கறிஞர் கொடூரமாகத் தாக்கப்பட்ட  சம்பவமும், பதற்றத்தையும் அதிர்ச்சியையும்  அளிக்கிறது.
 
கடந்தவாரத்தில் மருத்துவர் குத்தப்பட்ட விவகாரம், ரவுடிகள் சேர்ந்து காவலர்களைத் தாக்கிய சம்பவம், நடுரோட்டில் ஓட ஓட பெண்ணை விரட்டிச் சென்று தாக்கும் காட்சிகள் என ஒட்டுமொத்தமாக தமிழகம் வன்முறைக் களமாக மாறி இருப்பதை காட்டுகிறது.
 
இங்கு எந்தத்துறை ஆனாலும், பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதை அரசும், காவல்துறையும் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  எதிர்கட்சிகளுக்குப் பதில் அளிப்பதும், மத்திய அரசை தாக்கி பேசுவது மட்டும் தான் அரசின் நடவடிக்கை என்ற அளவில் இல்லாமல், நடக்கும் கொலைகளுக்கும், வன்முறைத் தாக்குதல்களுக்கும் முன்விரோதம் காரணம் என்று கூறி அவற்றை நியாயப்படுத்தாமல் மாநிலத்தின் ஆபத்தான நிலையைக் கவனத்தில் கொண்டு வன்முறைகளை களைய  அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 
இது போன்ற குற்றச் செயல்களுக்கு உடனடியாக பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும் என்ற உணர்வை மக்கள் மத்தியில் பதித்தால் தான் குற்றங்கள் குறையும் என்பதை காவல்துறை கருத்தில் கொள்ள வேண்டும்.
 
 
Edited by Mahendran