வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (08:43 IST)

விஜய்யைப் போல நானும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சினிமாவுக்கு வந்தேன்- சரத்குமார்

தன்னுடைய சினிமா கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு நுழைந்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அதன் முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவரின் கண்ணிப் பேச்சு தமிழக அரசியல் தளத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

கட்சியின் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான செயலியில் தினமும் ஏராளமான உறுப்பினர்கள் சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் ஆகியோர் அதிகமாக கட்சியில் இணைந்து வருவதாகவும், சில நேரங்களில் சர்வர் முடங்கும் அளவுக்கு கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை ஒரு கோடி பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் “விஜய் சொல்வது போல நானும் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்து இருபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன். அப்போது என் படங்களைதான் மக்கள் அதிகளவில் பார்த்துக் கொண்டிருந்தனர்.” எனக் கூறியுள்ளார். ஆனால் இன்று சரத்குமார் தன்னுடைய கட்சியை பாஜகவோடு இணைத்துவிட்டு அதில் ஐக்கியமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.