காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை போர் குற்றவாளியாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸின் பதுங்குதளமான காசா மீது இஸ்ரேல் போர் தொடர்ந்தது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 37 ஆயிரம் பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ள நிலையில், உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறியும் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது.
மேலும் ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானிலிருந்து தாக்கிய ஹெஸ்புல்லா மீது தாக்குதல் நடத்துவதாக அறிவித்த இஸ்ரேல், அண்டை நாடான லெபனான் மீதும், ஹெஸ்புல்லாவுக்கு ஆதரவு தரும் ஈரான் நாட்டின் மீதும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த செயலால் அதன் நட்பு நாடான அமெரிக்காவே அதிருப்தி அடைந்துள்ளது.
இந்நிலையில் காசாவில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகோவ் காலாண்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச கிரிமினல் நீதிமன்றம். இது இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் பெரும் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் சம்மதம் தெரிவித்தும் இஸ்ரேல் இணங்காமல் போரை தொடர்ந்து வரும் நிலையில் இந்த வாரண்ட் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K