புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (11:17 IST)

வீரப்பனை சுட்டுக்கொன்ற ஐபிஎஸ் அதிகாரி ! கொரோனா எச்சரிக்கையால் சுய தனிமை!

கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 4000 ஐத் தாண்டிவிட்டது. மூன்றாம் கட்ட பரவலுக்கு செல்லாமல் இருக்க அரசு கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.

சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதில் முக்கிய அதிகாரியாக இருந்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார். இவர் கொரோனா பாதித்த சி.ஆர்.பி.எப் மருத்துவர் ஒருவருடன் கடந்த 23ம் தேதி தொடர்பில் இருந்திருக்கிறார். இதனால் தனக்குக் கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.