வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (10:13 IST)

புத்தகத்தை வைத்து இப்படி ஒரு உடற்பயிற்சி தேவையா...? நொண்டி சாக்கு சொன்ன நபரை திட்டிய நடிகை!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தகங்களை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவை கண்ட இணையவாசி ஒருவர் "புத்தகங்களுக்கு மரியாதையை கொடுங்கள் என கமெண்ட்ஸ் செய்துள்ளார். அதை கண்டு செம கடுப்பான கனிகா ... நான் புத்தகத்தை எரித்தேனா? புத்தகத்தை தவறாக விஷயத்திற்கு பயன்படுத்தினேனா? நானும் ஒரு படித்த பெண் தான்... எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக நொண்டிச் சாக்குகளை கூற வேண்டும் என்று காட்டத்துடன் தெரிவித்துள்ளார். நடிகை கனிகா ஃபை ஸ்டார் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.