வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (07:50 IST)

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் வெகும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து கோடை வெயிலை தணித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva