செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:35 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்கள் ஆக கோடை வெயில் கடுமையாக அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
புதுக்கோட்டை இராமநாதபுரம் கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடும் வெப்பத்தால் மக்கள் அவதியில் இருக்கும் நிலையில் அவ்வப்போது பெய்யும் மழை மக்களை மகிழ்ச்சி படித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva