1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (20:12 IST)

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளரின் சம்பளம் உயர்வு .. எத்தனை கோடி தெரியுமா ?

இந்தியாவில் உள்ள விளையாட்டுகளில் கிரிக்கெட்டுக்கு உள்ள மவுசு போல வேறு எந்த விளையாட்டுக்கும் ரசிகர்கள் கிடையாது. நம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தலையில்தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில், இந்திய  அணி பயிற்சியாளராக அடுத்த நீட்டிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் சம்பளத்தை, ரூ. 2 கோடி உயர்த்தியுள்ளது பிசிசிஐ. 
கடந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாட்ஸ்த்திரி பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் விமர்சனம் எழுந்தது. சமீபத்தில் அவரது பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி, ரவிசாஸ்திரிக்குப் பதிலாக வேறு ஒருவரை பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்க பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் போர்ட் ) முடிவு செய்தது. அதற்கான விண்ணப்பங்களும் வந்து குவிந்தன. ஆனால்,பிசிசிஐ ஒருமனதாக ரவிசாஸ்திரியை மீண்டும் கேப்டனாக நியமித்தது. இதற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆதரவளித்தார்.
 
இந்த நிலையில், தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி அடுத்த 2021 டி - 20 உலகக்கோப்பை தொடர் வரை பயிற்சியாளராக இருப்பார். எனவே, தற்போது ரவிசாஸ்திரியின் சம்பளம் ரூ. 8 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்ந்தியுள்ளது பிசிசிஐ.

மேலும் , பீல்டிங் பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்ட ஸ்ரீதருக்கு ரூ. 3. 5 கோடியாகவும் , பேட்டிங் பயிற்சியாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  விக்ரம் ரத்தோருக்கு ரூ, 2 கோடியாகவும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.