திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2018 (22:45 IST)

ரஜினி ஆட்சியை பிடிப்பாரா? அதிரடி சர்வே முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் எண்ட்ரியால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பது குறித்து இந்தியா டுடே கார்வி இணைந்து ஒபினியன் போல் நடத்தியுள்ளது. இதன்படி ரஜினியின் அரசியல் வருகையால் அதிமுகவின் வாக்கு வங்கி பெருமளவு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது

ரஜினியின் வருகையால் அதிமுகவுக்கு பாதகம் என்று 54% பேர்களும், சாதகம் என்றும் 35% பேர்களூம், 11% கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கருத்து கூறியுள்ளனர். ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவுக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பேர் மீண்டும் அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்றும், அவர்களில் 60% ரஜினிக்கு வாக்களிக்க விரும்புவதாகவும் 29% திமுகவுக்கு வாக்களிக்க விரும்புவதாகவும் அந்த சர்வேயில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் இப்போது தேர்தல் வந்தால் ரஜினிக்கு 33 தொகுதிகளும், அதிமுகவுக்கு 68 தொகுதிகளும், திமுகவுக்கு ஆட்சி அமைக்க தேவையான தொகுகளும் கிடைக்கும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது