திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (10:56 IST)

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை: இன்று முதல் முன்பதிவு..!

indian ship
நாகையில் இருந்து இலங்கைக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் கப்பல் சேவை தொடக்கம் என்றும், இந்த கப்பலில் பயணம் செய்ய இன்று நள்ளிரவு முதல் முன்பதிவு தொடங்கப்படும் என படகு இயங்கும் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் இந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பயணிகளிடம் ஆர்வம் குறைவு காரணமாகவும் போதிய அளவு முன்பதிவு இல்லை என்ற காரணத்தாலும் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியா இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் கடந்த 13 மே 13ஆம் தேதி மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த சேவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நாகை - காங்கேசன் இடையே கப்பல் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவைக்கு இன்று நள்ளிரவு முதல் முன்பதிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த  முறையாவது தொடர்ந்து இயங்குமா அல்லது சில நாட்களில் நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran