வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மே 2024 (06:27 IST)

நாகை எம்.பி. செல்வராஜ் காலமானார்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சோகம்..!

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்

நாகை தொகுதி எம்பி செல்வராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் இருந்த இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று அவர் காலமானார்

ஏற்கனவே அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் செல்வராஜ் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva