திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:41 IST)

7 மாநிலங்களில் விரைவில் சைகோவ் டி தடுப்பூசி அறிமுகம்..!

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க மூன்றாவதாக சைகோவ் டி என்ற தடுப்பூசி விரைவில் அறிமுகமாகவுள்ளது.  

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் மூன்றாவதாக சைகோவ் டி என்ற தடுப்பூசி விரைவில் அறிமுகமாகவுள்ளது.  இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக 11.6 லட்சம் டோஸ் சைகோவ் டி தடுப்பூசிகள் விரைவில் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளன. 
 
மேலும் பிகார், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய எழு மாநிலங்களிலும் விரைவில் சைகோவ் டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.