முன்னாடி நின்ன காரை கூட விடல; எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி ரெய்டு!

vijayabaskar
Prasanth Karthick| Last Modified வியாழன், 22 ஜூலை 2021 (10:40 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் செந்தில்பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அவரது வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

எம்.ஆர்.விஜய்பாஸ்கரின் கரூர் வீடு, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள குடியிருப்பு உள்ளிட்ட 20 இடங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் காரை கூட விடாமல் சோதனை மேற்கொண்டு வருவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ரெய்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :