வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 22 ஜூலை 2021 (07:40 IST)

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரிச்சோதனை!

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற குற்றச்சாற்று ஏற்கனவே இருந்தது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று காலை திடீரென அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது 
 
இந்த வருமான வரி சோதனை காரணமாக அவரது வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருமான வரி சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே திமுக ஆட்சி வந்த பிறகு ஒரு சில முக்கிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது திடீரென வருமான வரி சோதனை எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டின் முன் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.