1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (10:20 IST)

33 பேருக்கு ஒமிக்ரான் - அதிக பாதிப்பில் 3வது இடத்தில் தமிழகம்!

தமிழகத்தில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

 
இந்தியா முழுவதும் 236 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாகவும், உலகம் முழுவதும் 106 நாடுகளில் பரவி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். 
 
மேலும் அவர் கூறியதாவது, புதிதாக 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன. 
 
ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 34 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர். இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வரவேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. 
 
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.