விமான நிலையத்தில் விதிமீறலாக வாகன நிறுத்த கட்டணம் வசூல்..பணியாளர் நீக்கம் !
மதுரை விமான நிலையத்தில் விதிமீறலாக வாகன நிறுத்த கட்டண வசூல் உறுதி செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட பணியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் விதிமீறலாக வாகனங்களை நிறுத்துவோரிடம் விதிமீறி வாகனநிறுத்த கட்டணத்தை அங்குள்ள பணியாளர் வசூல் செய்துள்ளார்.
இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டதால் சம்பத்தப்பட்ட பணியாளரை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதுகுறித்து மதுரை எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளதாவது:
''மதுரை விமான நிலையத்தில் விதிமீறலாக வாகன நிறுத்த கட்டண வசூல் செய்யப்பட்ட பிரச்சனை குறித்து விமான நிலைய இயக்குநர் எனக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளித்துள்ளார்.
அப்பதிலில் “அதுகுறித்து குறித்து வணிக மேலாளர் நேரடி விசாரணையை மேற்கொண்டார். விதிமீறிய வாகனநிறுத்த கட்டண வசூல் உறுதி செய்யப்பட்டதால் அப்பணியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் .
மேலும் அப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தினிடம் இனி இது நிகழக்கூடாது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது “ என தெரிவித்துள்ளார்.