திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (17:29 IST)

ரூ.3.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..! இலங்கையைச் சேர்ந்த 2 பேர் உட்பட 4 பேர் கைது.!!

gold seized
சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3.3 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் தங்கம், போதைப்பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தங்கம் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்காமலிருக்க, அங்கு பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் தங்கத்தை வெளியில் கொண்டு வருவதும் வாடிக்கையாக இருக்கிறது. 
 
இந்த நிலையில்  வெளிநாட்டிலிருந்து வரும் விமானத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 
 
அதன் அடிப்படையில் அதிகாரிகள்  சென்னை விமான நிலையத்தைக் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 5.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 
கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு மூன்று கோடியே மூன்று லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்