ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..
இன்று காலை முதல் இளையராஜா விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு இளையராஜாவும் தமிழக அரசின் அறநிலைத்துறையும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஆகம விதிப்படிதான் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்றும் கோவில் நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆகமம் என்பது கோவிலுக்கு கோவில் வேறுபடும், அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று ஆன்மீகப் பேச்சாளர் கலையரசி நடராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார், அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
ஆகமம் என்பது இறைவனால் அருளப்பட்டது என்பது உண்மையாக இருந்தால், எந்த மனிதரையும் உயர்த்தியும் தாழ்த்தியும், இவர் உள்ளே வரலாம் வரக்கூடாது என்றெல்லாம் சொல்லி இருக்க மாட்டார். ஆகமம் என்பது கோவிலுக்கு கோவில் வேறுபட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு மக்களுக்கு வந்தது என்றால் இந்த ஜீயர்கள், பட்டாச்சாரியார்களின் ஆட்டமெல்லாம் தானாகவே அடங்கிவிடும்”
Edited by Siva