புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 31 ஜனவரி 2019 (19:39 IST)

இளையராஜா - 75 நிகழ்ச்சிக்கு தடையில்லை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நந்தனம் ஒ.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்ரவரி 2,3 ஆம் தேதிகளில்  இளையராஜா - 75 நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்சியை நடத்த தடைகோரி  தயாரிப்பாளர்கள் சதீஸ்குமார், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுசம்பந்தமாக உரிய ஆதாரங்கள் இன்றி கடைசி நேரத்தில் மனுதாரர்கள் மனுதாக்கல் தொடுத்ததால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்தக் கணக்கு விவரங்களை மார்ச் 3 ஆம் தேதி பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் சங்கம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
 
இளையராஜாவின் சம்பளமாக ரூ. 3 கோடி என்றும், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கான வாடகை நாளொன்றுக்கு  ரூ. 30 லட்சம் என்றும் கூறப்படுகிறது.
 
தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் பொதுக்குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை என நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.எனவே வரும் பிப்ரவரி 2,4 ஆகிய தேதிகளில் இளையராஜா இசை நிகழ்சிகள் நடப்பது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.