1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 நவம்பர் 2024 (16:21 IST)

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் உடல் நசங்கி ஐந்து பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், இந்த ஐவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
 
அவர்கள் சாலையோரம் அமர்ந்திருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கார் ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரில் இருந்த இருவரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த சம்பவத்தின் காரணமாக, சம்பவ இடத்திற்கு உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேண்டும் எனக் கோரி, பலியான பெண்களின் உடல்களை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து, மாவட்ட எஸ்பி, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Mahendran