"ஐ லவ் அட்வெஞ்சர்" கார்த்தியின் தேவ் பட ட்ரைலர் வெளியானது...!

Last Modified வியாழன், 31 ஜனவரி 2019 (18:58 IST)
`கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நடித்து வரும் படம், `தேவ்.’ இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்களையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. 

 
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல்பிரீத் சிங் நடித்தார். தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்பட மேலும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
 
பயணத்தை மையமாக வைத்து நகரும் இப்படம் காதல், குடும்ப உறவுகள், சண்டை ஆகியவற்றை உள்ளடக்கி விறுவிறுப்பாக நகரும் என தெரிகிறது.  இந்தியா முழுவதும் 55 இடங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ள இப்படத்திற்கு சமீபத்தில் இந்த படத்தை தணிக்கைக்கு "யு" சான்றிதழ் அளித்தனர். 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸாகும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் கார்த்தி ரசிகர்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :